Tuesday, January 29, 2008

ஒன்றே ஒன்று – எழுதியதில் பிடித்தது!

ஒன்றே ஒன்று - பதிவுகளில் பிடித்தது ஒட்டத்திற்கு என்னையும் மின்னஞ்சலில் அழைத்த, தொடர் ஒடத்தில் இனைந்த, இந்த பதிவை எழுதவைத்த சதிஷ்க்கு மிக்க நன்றி...

நான் வலைப்பதிவைகளைப் படிக்க ஆரம்பித்த பொழுது நான் படித்த பதிவுகளுக்கு என்னுடைய கருத்தை தெரிவிப்பதற்க்காக தான் ‘என் சிந்தனைகள்’ என்ற என் வலைபதிவை தொடங்கினேன். ஆனால் நானும் ஒரு சில பதிவுகளை பதித்திருப்பது ரொம்ப ஆச்சிரமாகவும், அதே சமயத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் வலைப்பதிவு ஆரம்பித்ததிலிருந்து கடந்த ஆண்டு முடியும் வரை இடையே உள்ள சில மாதங்களில் நான் எழுதிய சில பதிவுகளில் எனக்கு பிடித்த ஒன்று ‘
உணர்வுகள் உணர்த்திவவை…’. ஏன்னென்றால் இது நான் எழுதிய இரு மிகச்சிறு கவிதைகள் தான் என்றாலும் அவை என் உணர்வுகள் உணர்த்திவவை.

முதல் சிறு கவிதை மதத்தைப் பற்றிய என்னுடைய தனிப்பட்ட கருத்தைக் கொண்டது. இந்த சிறு கவிதையை எழத என் உணர்வுகள் உணர்த்தியது இதுதான்…

இயற்கைக்கு மாறுப்பட்ட தன்மையில் மனிதன் வாழவேண்டியது சமுதாய நலனுக்கும், மனிதனின் வளர்ச்சிக்கும் நாகரிகத்திற்கும் அவசியமானது என்று கண்டறிந்த நம் முன்னோர்கள். அதனாலேயே இயற்கைக்கு மாறான காரியங்கள் எங்கெங்கு காணப்படுகின்றனவோ எங்கெங்கு தேவைப்படுகின்றனவோ அங்கெல்லாம் மனிதனை நெறிப்படுத்தவும், ஒழுங்குப்படுத்தவும், ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவும், அவனுடைய வாழ்வியல் போரட்டங்களுக்கு திர்வுகாணவும் நெறி(வழி)முறைகளை மதங்களாக வகுத்தனர். ஆனால் அனைத்தையும் மறந்த மறைத்த புதைத்த மதமும் மனிதனும் இன்று…

மதத்தையும் மனிதனையும் காண்பது என்பது மனித நேயத்தையும், இதயத்தின் ஈரத்தையும் தொலை(மறை)த்து, பெயரில் கூட மதத்தின் சாய(த்தை)லை புகுத்தி, மதத்தின் அடையாளங்களை உடுத்தி, அதனால் மனிதர்களுக்கு இடையே கீழ்மேல் தன்னையை ஏற்படுத்தி வேறுப்படுத்தி, இயற்கைக்கு விரோதமான தனியுடைமை உணர்ச்சியை நிலை நிறுத்தி, இவை அனைத்தையும் உள்ளடக்கியதாக கொண்ட இந்த மதங்களின் முகமுடிகளை உடுத்திய அவனின் தோற்றத்தைக் காண்பது என்பது???!!!…

எனவே இனி உண்மையான மனிதனன காண்பது என்பது மதம் மரணமடைந்து அதன் மறுப்பிறவியாக ‘அன்பு’ பிறந்தால் தான்.

இரண்டாவது சிறு கவிதை ஒரு பார்வையற்ற மழலைப் பார்த்த போது
ப(க)தறியது… இது கவிதைக்கான வார்த்தைகள் அல்ல என் உணர்வின் கோர்வைகள்…

நாலுப்பேருக்கு தெரிகிற மாதிரி இன்னும் எந்த பதிவையும் எழதாத போது தொடர் ஓட்டத்தில் இழுக்க ஐந்து பேரா? வலைப்பதிவில் தெர்ந்தவர்கள் ஏற்கனவே தொடர் ஓட்டத்தில் இருப்பதால். நான் தொடர் ஓட்டத்திற்கு அழைக்க தெரிந்ததும் முடிந்ததும் ஒருவர் தான்.

நான் 'தொடர் ஓட்டத்திற்கு' அழைக்க விரும்புவர்:

1.
கிருத்திகா

உள்ளன்புடன்,
தினேஷ்

10 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

நாம் எத்தனைமுறை பேசினாலும் அத்தனைமுறையும் மறக்காமல் தாங்கள் குறிப்பிடுவது " நான் பின்னூட்டமிடவே" பதிவை தொடங்கினேன் என்று.. ஆனால் இன்று தங்களின் கவிதைகளுக்கான விளக்கங்களையும் அது சார்ந்த சூழலோடு பேச முற்பட்ட போது தான் புரிகிறது தங்களின் எழுதும் திறமை..ஆழமான கருத்துக்கள், தெளிவான நடை.. தினேஷ் நீங்கள் இனி அதிகம் எழுத வேண்டும்.. எழுதுங்கள்... வாழ்த்துக்கள்...
இப்படின்னெல்லாம் சொல்லனும்னு ஆசைதான் ஆனா சொல்ல மாட்டேன் ஏன்னா நீங்க என்னை கடினமான இந்த தொடர் ஓட்டத்தில் இழுத்து விட்டுட்டீங்களே.. ஆனாலும் நன்றி முயற்சிக்கிறேன்.

நிவிஷா..... said...

நல்ல பதிவு

melum niraiya eludhunga dinesh! valthukkal.

natpodu
nivisha!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

கவிதைகளே உணர்வுகளின் வெளிப்பாடுகள் தானே இல்லையா தினேஷ் :)

அழைப்பை ஏற்றதற்கு நன்றி!

மே. இசக்கிமுத்து said...

நல்ல சுய விமர்சனம்!! தொடரட்டும்!!

தினேஷ் said...

கிருத்திகா,

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும், ஊக்கம் தருகின்ற கருத்துக்கும் மிக்க நன்றி…

தினேஷ்

தினேஷ் said...

நிவிஷா,

உங்கள் வாழ்த்துத்திற்கு மிக்க நன்றி…

தினேஷ்

தினேஷ் said...

Sathish,

எனக்கு நிங்கள் நன்றி சொல்வதைவிட நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், ஏன்னென்றால் இந்த பதிவு எழத காரணமே நிங்கள் என்னை தொடர் ஒட்டத்தில் இணைத்து தான்.
உங்கள் வாழ்த்துக்கும் அளித்த வாய்ப்புக்கும் மிக்க நன்றி...
தினேஷ்

தினேஷ் said...

இசக்குமுத்து,

வாழ்த்திற்கு மிக்க நன்றி...

தினேஷ்

Rasiga said...

பார்வையற்ற குழந்தையின் பாதிப்பில் உருவாகிய கவிதை நெஞ்சை நெகிழ வைத்தது.உணர்வுகளை வார்த்தைகளாக வடிவமைப்பது அழகு!

தினேஷ் said...

ரசிகா,

மிக்க நன்றி…

தினேஷ்