Monday, December 17, 2007

உணர்வுகள் உணர்த்திவை...

மதங்களுக்கு மறுப்பிறவியுண்டு
மதங்கள்
மரணம் அடைந்தால்
மனிதன் பிறப்பான்...
..................................................

பார்வையற்றோர் பள்ளிக்குச்சென்றேன்
பார்வையிழந்த மழலையை
பார்த்தேன் ப(க)தறினேன்
மழலைக்காக மட்டுமே அன்று
கடவுளே பிறக்கவேயில்லை என்று…
..................................................

9 comments:

மே. இசக்கிமுத்து said...

மதங்கள் எப்போது மரணமடையும்? மனிதன் எப்போது பிறப்பான் இந்த கலியுகத்தில்?

கவிதை அருமை!

தினேஷ் said...

இசக்கிமுத்து,

‘மதங்களில் கடவுளை தேடாமல், மனசாட்யில் அன்பு என்ற கடவுளை தேடினால் மதம் மரணம் அடைந்து மனிதன் பிறப்பான்..’

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

தினேஷ்

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//
மதங்களுக்கு மறுப்பிறவியுண்டு
மதங்கள்
மரணம் அடைந்தால்
மனிதன் பிறப்பான்...
//

- அழகு

Girl of Destiny said...

உணர்வு உணர்த்தும் கவிதைகள்... நன்றாக உள்ளன!

நீங்கள் சென்ற பள்ளி பற்றி மேலும் தகவல் சொன்னால் நன்றாக இருக்கும்...

தினேஷ் said...

Girl of Destiny,

New no. 58, Venkatanarayana Road, T.nagar, Chennai – 600 017 என்ற முகவரியில் THAKKAR BAPA VIDYALAYA உள்ளது. இது நான் பணிபுரியும் அலுவலகத்தின் அருகே உள்ளது. இது ஒரு CHARITABLE TRUST ஆகும். இங்கு பார்வையற்ற பட்டதாரிகளுக்கான (COLLEGE STUDENTS & GRADUATES ASSOCIATION OF THE BLIND), மனநலம் குன்றியற்க்கான பள்ளி, ஏழை மாணவர்களுக்கான பள்ளிக்கூடம்(1 to 5) தங்கும் விடுதி, ஏழை மாணவர்களுக்கான தொழிற்க்கல்வி, நூலகம் மற்றும் சில இயங்குகின்றன. அவ்வபோது சில கண்காட்சிகளும் நடைப்பெறுகிறது. இது மகாத்மா காந்தி அவர்களால் 1933-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஆகும்.

நான் கடந்த வாரம் அங்கு சென்ற போது தான் ஒரு பார்வையற்ற மழலையை பார்க்க நேர்ந்தது. அப்போது நான் உணர்ந்தை தான் கவிதையாக எழுதிருந்தேன். தாங்கள் பார்வையற்றோருக்கான பள்ளிக்கு போக வேண்டும் என்று நினைத்தால், Little Flower Convent Higher Secondary School for the Blind, No. 127, G.N. Chetty Road, Chennai - 600 006. Ph: 826 9618 என்ற முகவரிக்கு செல்லலாம்.

தங்களின் மனித நேயத்திற்கு தலைவணங்குகிறேன்.

நன்றி...

தினேஷ்

தினேஷ் said...

Sathish,

நன்றி...

தினேஷ்

Rasiga said...

மனதில் அன்பு பிறக்கும் போது , நிச்சயம் அங்கு கடவுள் பிறப்பார்!

பார்வையற்ற மழலைகளை நினைத்து மனம் கணத்தது.

அழகானதொரு கவிதை.

Mangai said...

Good thoughts. I too have such experiences
one correction - maru piravi - 'p' in between is not required.

தினேஷ் said...

rasiga மற்றும் mangai,

மிக்க நன்றி...

தினேஷ்