Saturday, April 19, 2008

ஆண்டவன் அளி(மறு)ப்பாரா???அன்பும் ஆதரவும்
அற்ற அனாதைக்குழந்தைகளுக்கு
அடைக்கலம் அளிக்குமா
ஆண்டவன் அன்றி
ஆளில்லாத ஆலயங்கள்???

Tuesday, February 5, 2008

சென்னை சங்கமம்


சென்னை சங்கமம் மற்றும் தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி பண்பாட்டுத் துறை இணைந்து ஜனவரி 10-ம் தேதி தொடங்கி ஜனவரி 17-ம் தேதி வரை சென்னையில் கிராமிய கலை நிகழ்ச்சிகளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேரத்தில் மிகச்சிறப்பாக திருவிழவாக
நடத்தி(கொண்டடி)னார்கள். சென்னை மாநகரத்திலுள்ள பூங்காகள், வீதிகள், கோவில் முற்றங்கள் என சென்னை மாநகரத்தின் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்தன. தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் மின்விளக்குகளால் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட இரு பக்க மரங்களுக்கு இடையே சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடந்த போது நான் பார்த்ததை, புகைப்படமாக பிடித்தை, ரசித்தை மற்றும் வியந்ததை, உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பகிர்(தி)வு இது.பறை, பரதம், பெரியமேளம், கரகம், காவடி, கும்மி, தெம்மாங்கு, ஜிக்காட்டம், ஜிம்ளா மேளம், ஒயிலாட்டம், களியல், கட்டைக்குழல், கூத்து, மான் கொம்பாட்டம், ஆழி ஆட்டம், செண்டை, சிலம்பு, கோலாட்டம், புலியாட்டம், பொம்மலாட்டம், மயிலாட்டம், மாடாட்டம், நையாண்டி, கொம்பிசை, கணியான், கூத்து, கொக்கிலியாட்டம், பொய்கால் குதிரை, மோகினியாட்டம், மோடியாட்டம், களரி, படுகாசி, சிங்காரச் செண்டை, மகுடி ஆட்டம், குறவஞ்சி, துடும்பு, கொண்டத்தாட்டம், தப்பாட்டம், தேவராட்டம், வில்லுப்பாட்டு, போன்ற 50-க்கும் மேலான பல்வேறு தமிழ் மண்ணின் மணம் மற்றும் குணம் சார்ந்த தமிழ்ர்களின் கலை வடிவங்களின் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், இலக்கிய நிகழ்வுகள் மற்றும் தமிழ் மரபிசை நிகழ்வுகள் நடந்தன. எல்லா கிராமிய கலை நிகழ்ச்சிகளையும் அந்தந்த பகுதியில் உள்ள எல்லா தரப்பு மக்களும் மிக அதிகமாக கூடி இணைந்து, மகிழ்ந்து, வியந்து, கிராமிய கலைஞர்களுடன் கலந்து, ரசித்து கொண்டாடியதது எனக்கு இது ஒரு புதிய ஆச்சிரமாகவும், அதே சமயம் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் நிகழ்ச்சி நடந்த போது ஒருபுறம் கலை திருவிழாவில் நிகழ்ச்சிகள் களைகட்டியிருந்தது, மறுபுறம் உணவு திருவிழாவில் சிறப்பு உணவு வகைகள் நாவை கட்டியிழுந்திருந்தது.
சென்னை சங்கமம் அமைப்பாளர்கள் 1500-ம் மேற்ப்பட்ட கலைஞர்களை அழைத்து வந்து தங்குவதற்கு தகுந்த இடம், நல்ல உணவு மற்றும் 8000 முதல் 9000 வரை ஊதியம் தந்து, ஒரே வாரத்தில் 4500 நிகழ்ச்சிகளை நடத்தி சென்னை மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தினார்கள். அடுத்த தலைமுறை இந்த கலைஞர்களை அடையாளம் காணவும், கிராமிய கலை நிகழ்ச்சிகளை அறிந்துக்கொள்ளவும், அதன் வழியே கிராமிய கலைகளை அழியாமல் பாதுக்காக்கவும் சென்னை சங்கமம் அமைப்பாளர்களுக்கு தோன்றிய இந்த நல்ல சிந்தனை கிராமிய கலைக்கு ஒரு புதிய நல்வழியை வகுத்துள்ளது.
கிராமிய கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் மற்றும் இசைக்கும்,, சென்னை மக்கள் மனதார அளித்ததுள்ள இந்த அங்கீகாரம் கிராமிய கலைஞர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் மட்டும் அல்லாமல் அந்த கலைக்கும் புதிய புத்துணர்வு அளித்துள்ளது.வாழ்க கிராமிய கலைஞர்கள்! வளர்க கிராமிய கலைகள்!

உள்ளன்புடன்,
தினேஷ்

Tuesday, January 29, 2008

ஒன்றே ஒன்று – எழுதியதில் பிடித்தது!

ஒன்றே ஒன்று - பதிவுகளில் பிடித்தது ஒட்டத்திற்கு என்னையும் மின்னஞ்சலில் அழைத்த, தொடர் ஒடத்தில் இனைந்த, இந்த பதிவை எழுதவைத்த சதிஷ்க்கு மிக்க நன்றி...

நான் வலைப்பதிவைகளைப் படிக்க ஆரம்பித்த பொழுது நான் படித்த பதிவுகளுக்கு என்னுடைய கருத்தை தெரிவிப்பதற்க்காக தான் ‘என் சிந்தனைகள்’ என்ற என் வலைபதிவை தொடங்கினேன். ஆனால் நானும் ஒரு சில பதிவுகளை பதித்திருப்பது ரொம்ப ஆச்சிரமாகவும், அதே சமயத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் வலைப்பதிவு ஆரம்பித்ததிலிருந்து கடந்த ஆண்டு முடியும் வரை இடையே உள்ள சில மாதங்களில் நான் எழுதிய சில பதிவுகளில் எனக்கு பிடித்த ஒன்று ‘
உணர்வுகள் உணர்த்திவவை…’. ஏன்னென்றால் இது நான் எழுதிய இரு மிகச்சிறு கவிதைகள் தான் என்றாலும் அவை என் உணர்வுகள் உணர்த்திவவை.

முதல் சிறு கவிதை மதத்தைப் பற்றிய என்னுடைய தனிப்பட்ட கருத்தைக் கொண்டது. இந்த சிறு கவிதையை எழத என் உணர்வுகள் உணர்த்தியது இதுதான்…

இயற்கைக்கு மாறுப்பட்ட தன்மையில் மனிதன் வாழவேண்டியது சமுதாய நலனுக்கும், மனிதனின் வளர்ச்சிக்கும் நாகரிகத்திற்கும் அவசியமானது என்று கண்டறிந்த நம் முன்னோர்கள். அதனாலேயே இயற்கைக்கு மாறான காரியங்கள் எங்கெங்கு காணப்படுகின்றனவோ எங்கெங்கு தேவைப்படுகின்றனவோ அங்கெல்லாம் மனிதனை நெறிப்படுத்தவும், ஒழுங்குப்படுத்தவும், ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவும், அவனுடைய வாழ்வியல் போரட்டங்களுக்கு திர்வுகாணவும் நெறி(வழி)முறைகளை மதங்களாக வகுத்தனர். ஆனால் அனைத்தையும் மறந்த மறைத்த புதைத்த மதமும் மனிதனும் இன்று…

மதத்தையும் மனிதனையும் காண்பது என்பது மனித நேயத்தையும், இதயத்தின் ஈரத்தையும் தொலை(மறை)த்து, பெயரில் கூட மதத்தின் சாய(த்தை)லை புகுத்தி, மதத்தின் அடையாளங்களை உடுத்தி, அதனால் மனிதர்களுக்கு இடையே கீழ்மேல் தன்னையை ஏற்படுத்தி வேறுப்படுத்தி, இயற்கைக்கு விரோதமான தனியுடைமை உணர்ச்சியை நிலை நிறுத்தி, இவை அனைத்தையும் உள்ளடக்கியதாக கொண்ட இந்த மதங்களின் முகமுடிகளை உடுத்திய அவனின் தோற்றத்தைக் காண்பது என்பது???!!!…

எனவே இனி உண்மையான மனிதனன காண்பது என்பது மதம் மரணமடைந்து அதன் மறுப்பிறவியாக ‘அன்பு’ பிறந்தால் தான்.

இரண்டாவது சிறு கவிதை ஒரு பார்வையற்ற மழலைப் பார்த்த போது
ப(க)தறியது… இது கவிதைக்கான வார்த்தைகள் அல்ல என் உணர்வின் கோர்வைகள்…

நாலுப்பேருக்கு தெரிகிற மாதிரி இன்னும் எந்த பதிவையும் எழதாத போது தொடர் ஓட்டத்தில் இழுக்க ஐந்து பேரா? வலைப்பதிவில் தெர்ந்தவர்கள் ஏற்கனவே தொடர் ஓட்டத்தில் இருப்பதால். நான் தொடர் ஓட்டத்திற்கு அழைக்க தெரிந்ததும் முடிந்ததும் ஒருவர் தான்.

நான் 'தொடர் ஓட்டத்திற்கு' அழைக்க விரும்புவர்:

1.
கிருத்திகா

உள்ளன்புடன்,
தினேஷ்

Wednesday, January 9, 2008

பிடித்த நல்ல வாக்கியங்கள் - 2

மனிதன் தானாகக் பிறக்கவில்லை; அதனால் அவன் தனக்காக வாழக் கூடாதவன்.
               --தந்தை பெரியார்


நீ சொல்லுவதை மற்றவர்கள் ஏற்க மறுக்கலாம்; ஆனால் நீ நினைத்ததைச் சொல்லுவதற்கு உனக்கு உரிமை உண்டு.
               --வால்டர்.


அன்பு கலாக்காமல் தரப்படும் உணவு சுவைக்காது; அது மனிதனின் பாதி பசியைத்தான் போக்கும்.
               --கலில் கிப்ரான்


உங்களுக்கு எதை செய்யக்கூடாது என்று தோன்றுகிறதோ அதை பிறருடன் சேர்ந்து செய்யாதீர்கள்.
               --சன்பூஷியஸ்


உலகை மாற்ற வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்; ஆனால் எவரும் தன்னைத் திருத்திக் கொள்ள விரும்புவதில்லை.
               --லியோ டால்ஸ்டாய்


எதிர்காலம் பற்றி எண்ணாதே; அது தானாக வரக்கூடியது.
               --ஜான்சன்


மனிதன் எப்படிப் பிறந்தான் என்பதைக் பற்றி கவலை இல்லை; எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம்.
               --டாக்டர் ஜான்சன்


கடந்த காலத்தை மாற்றியமைக்க இறைவனுக்குக்கூட சக்தி கிடையாது.
               --டிரைடன்


மனிதன் செலவழிப்பதிலேயே மதிப்பு வாய்ந்தது நேரம்.

மற்றவர்கள் செய்கின்ற தவறுகளை நீ செய்யாதே; நீயே சொந்தமாகச் செய்.
               --பெர்னார்ட்ஷா


அழகிய முகம், பாதி வரதட்சிணைக்குச் சமம்.
               --ஜெர்மானியப் பழமொழி


நம்மைத் தவிர, வேறு எவராலும் நமக்கு அமைதியைத் தேடித்தர முடியாது.
               --எமர்சன்


மனிதன் இறப்ப்தற்காகப் பிறக்கிறான்; ஆனால், என்றும் வாழ்வதற்காக இறக்கிறான்.

இருள் வந்து விட்டதே என்று கவலைப்படாதீர்கள், இருள் வந்தால் தான் நட்சத்திரங்களை ரசிக்க முடியும்.
               --சார்லன்-டி-விவர்ட்


வளமான காலத்தில் மற்றவர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள்; வறுமை காலத்தில் நாம் மற்றவர்களை தெரிந்து கொள்கிறோம்.

தவறுக்கு நாம் கொடுக்கும் பெயர்தான் அனுபவம்.
               --ஆஸ்கர் ஒயில்ட்


மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல, விடா முயற்சியால்தான்.
               --எடிசன்


முடியாது என்று நீ சொன்ன எல்லாம் யாரே ஒருவன் எங்கோ செய்து கொண்டு இருக்கிறான்.
               --டாக்டர் கலாம்

----------------------------------------------------------------------------------