மனிதன் தானாகக் பிறக்கவில்லை; அதனால் அவன் தனக்காக வாழக் கூடாதவன்.
--தந்தை பெரியார்
நீ சொல்லுவதை மற்றவர்கள் ஏற்க மறுக்கலாம்; ஆனால் நீ நினைத்ததைச் சொல்லுவதற்கு உனக்கு உரிமை உண்டு.
--வால்டர்.
அன்பு கலாக்காமல் தரப்படும் உணவு சுவைக்காது; அது மனிதனின் பாதி பசியைத்தான் போக்கும்.
--கலில் கிப்ரான்
உங்களுக்கு எதை செய்யக்கூடாது என்று தோன்றுகிறதோ அதை பிறருடன் சேர்ந்து செய்யாதீர்கள்.
--சன்பூஷியஸ்
உலகை மாற்ற வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்; ஆனால் எவரும் தன்னைத் திருத்திக் கொள்ள விரும்புவதில்லை.
--லியோ டால்ஸ்டாய்
எதிர்காலம் பற்றி எண்ணாதே; அது தானாக வரக்கூடியது.
--ஜான்சன்
மனிதன் எப்படிப் பிறந்தான் என்பதைக் பற்றி கவலை இல்லை; எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம்.
--டாக்டர் ஜான்சன்
கடந்த காலத்தை மாற்றியமைக்க இறைவனுக்குக்கூட சக்தி கிடையாது.
--டிரைடன்
மனிதன் செலவழிப்பதிலேயே மதிப்பு வாய்ந்தது நேரம்.
மற்றவர்கள் செய்கின்ற தவறுகளை நீ செய்யாதே; நீயே சொந்தமாகச் செய்.
--பெர்னார்ட்ஷா
அழகிய முகம், பாதி வரதட்சிணைக்குச் சமம்.
--ஜெர்மானியப் பழமொழி
நம்மைத் தவிர, வேறு எவராலும் நமக்கு அமைதியைத் தேடித்தர முடியாது.
--எமர்சன்
மனிதன் இறப்ப்தற்காகப் பிறக்கிறான்; ஆனால், என்றும் வாழ்வதற்காக இறக்கிறான்.
இருள் வந்து விட்டதே என்று கவலைப்படாதீர்கள், இருள் வந்தால் தான் நட்சத்திரங்களை ரசிக்க முடியும்.
--சார்லன்-டி-விவர்ட்
வளமான காலத்தில் மற்றவர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள்; வறுமை காலத்தில் நாம் மற்றவர்களை தெரிந்து கொள்கிறோம்.
தவறுக்கு நாம் கொடுக்கும் பெயர்தான் அனுபவம்.
--ஆஸ்கர் ஒயில்ட்
மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல, விடா முயற்சியால்தான்.
--எடிசன்
முடியாது என்று நீ சொன்ன எல்லாம் யாரே ஒருவன் எங்கோ செய்து கொண்டு இருக்கிறான்.
--டாக்டர் கலாம்
----------------------------------------------------------------------------------
4 comments:
கருத்துள்ள வாக்கியங்கள் அனைத்துமே அருமையாயிருக்கு, பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி !!
Divya,
மிக்க நன்றி...
தினேஷ்
பாராட்டுக்கள் தினேஷ்.. நல்ல பயனுள்ள தொகுப்பு.. வாழ்த்துக்கள்.. அதிகம் எழுதுங்கள்...
கிருத்திகா,
உங்கள் பாரட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி,
தினேஷ்
Post a Comment