Saturday, September 29, 2007

படித்து பிடித்த கவிதைகள்

எனக்கு
யாரும்மில்லை
நான்
கூட...
     --நகுலன்

....................................................

ஐ.நா கேட்க்கிறது
ஈழத்தை ஈன்றேடுக்க
இளஞ்சிறார்க்களா?

ஈழ
இளஞ்சிறார்க்களின் இடிமுழக்கம்
...
...
தாயை
நேசிக்க மிசை
எதற்கு?

....................................................

விதவை பார்க்கிறாள்
கண்ணாடியில்
ஒட்டுப்பொட்டு...

....................................................

கோவிலுக்கு உள்ளேயும்
கோவிலுக்கு வெளியேயும்
பிச்சை...

....................................................

வருமையிலும் IT
     ........
குப்பைப் பொறுக்கும்
சிறுவன் கையில்
குறுந்தகடு...

....................................................

ஓயாமல் உழைத்த
தந்தை ஒய்வெடுக்கிறார்
முதியோர் இல்லத்தில்...

....................................................

ஆடை கிழிந்த
சிறுமி புது ஆடை
மாற்றுக்கிறாள் ஜன்னலுக்கு...

....................................................

பூமி எங்கும்
விடிந்துவிட்டது
நான் மட்டும்
இருளில்...

....................................................

ஈரம்மில்லாதவர்கள்
மழையும் பனியும்
நனைந்தப்படி ரிக்ஷாக்காரன்...

....................................................

வாங்காமலே போய்விட்டது
பொம்மை விலைக்கேட்ட
ஏழை குழந்தை...

....................................................

உன் கைரேகையை
பார்த்து எதிர்க்காலத்தை
நம்பிவிடதே
கை இல்லாதவனுக்கும்
எதிர்க்காலம் உண்டு....

....................................................

முதல் காதலை
அடைய முயற்சிக்கும் பொது
தகுதி இருப்பத்தில்லை
எல்லா தகுதிக்களும்
அடைந்தப் பிறகு
முதல் காதல்
கிடைப்பத்தில்லை...

....................................................

முதியோர் இல்லம்
     ........
இது ஒரு
மனிதக்காட்சி சாலை
இங்கு மிருங்கங்கள்
வந்து போகின்றன
மனிதர்களை பார்க்க!

....................................................

3 comments:

Divya said...

\\உன் கைரேகையை
பார்த்து எதிர்க்காலத்தை
நம்பிவிடதே
கை இல்லாதவனுக்கும்
எதிர்க்காலம் உண்டு....\\

வாவ்! சூப்பர்!

தினேஷ் said...

திவ்யா,

மிக்க நன்றி...

தினேஷ்

றிசாந்தன் said...

nalla irukku