ஒன்றே ஒன்று - பதிவுகளில் பிடித்தது ஒட்டத்திற்கு என்னையும் மின்னஞ்சலில் அழைத்த, தொடர் ஒடத்தில் இனைந்த, இந்த பதிவை எழுதவைத்த சதிஷ்க்கு மிக்க நன்றி...
நான் வலைப்பதிவைகளைப் படிக்க ஆரம்பித்த பொழுது நான் படித்த பதிவுகளுக்கு என்னுடைய கருத்தை தெரிவிப்பதற்க்காக தான் ‘என் சிந்தனைகள்’ என்ற என் வலைபதிவை தொடங்கினேன். ஆனால் நானும் ஒரு சில பதிவுகளை பதித்திருப்பது ரொம்ப ஆச்சிரமாகவும், அதே சமயத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் வலைப்பதிவு ஆரம்பித்ததிலிருந்து கடந்த ஆண்டு முடியும் வரை இடையே உள்ள சில மாதங்களில் நான் எழுதிய சில பதிவுகளில் எனக்கு பிடித்த ஒன்று ‘உணர்வுகள் உணர்த்திவவை…’. ஏன்னென்றால் இது நான் எழுதிய இரு மிகச்சிறு கவிதைகள் தான் என்றாலும் அவை என் உணர்வுகள் உணர்த்திவவை.
முதல் சிறு கவிதை மதத்தைப் பற்றிய என்னுடைய தனிப்பட்ட கருத்தைக் கொண்டது. இந்த சிறு கவிதையை எழத என் உணர்வுகள் உணர்த்தியது இதுதான்…
இயற்கைக்கு மாறுப்பட்ட தன்மையில் மனிதன் வாழவேண்டியது சமுதாய நலனுக்கும், மனிதனின் வளர்ச்சிக்கும் நாகரிகத்திற்கும் அவசியமானது என்று கண்டறிந்த நம் முன்னோர்கள். அதனாலேயே இயற்கைக்கு மாறான காரியங்கள் எங்கெங்கு காணப்படுகின்றனவோ எங்கெங்கு தேவைப்படுகின்றனவோ அங்கெல்லாம் மனிதனை நெறிப்படுத்தவும், ஒழுங்குப்படுத்தவும், ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவும், அவனுடைய வாழ்வியல் போரட்டங்களுக்கு திர்வுகாணவும் நெறி(வழி)முறைகளை மதங்களாக வகுத்தனர். ஆனால் அனைத்தையும் மறந்த மறைத்த புதைத்த மதமும் மனிதனும் இன்று…
மதத்தையும் மனிதனையும் காண்பது என்பது மனித நேயத்தையும், இதயத்தின் ஈரத்தையும் தொலை(மறை)த்து, பெயரில் கூட மதத்தின் சாய(த்தை)லை புகுத்தி, மதத்தின் அடையாளங்களை உடுத்தி, அதனால் மனிதர்களுக்கு இடையே கீழ்மேல் தன்னையை ஏற்படுத்தி வேறுப்படுத்தி, இயற்கைக்கு விரோதமான தனியுடைமை உணர்ச்சியை நிலை நிறுத்தி, இவை அனைத்தையும் உள்ளடக்கியதாக கொண்ட இந்த மதங்களின் முகமுடிகளை உடுத்திய அவனின் தோற்றத்தைக் காண்பது என்பது???!!!…
எனவே இனி உண்மையான மனிதனன காண்பது என்பது மதம் மரணமடைந்து அதன் மறுப்பிறவியாக ‘அன்பு’ பிறந்தால் தான்.
இரண்டாவது சிறு கவிதை ஒரு பார்வையற்ற மழலைப் பார்த்த போது
ப(க)தறியது… இது கவிதைக்கான வார்த்தைகள் அல்ல என் உணர்வின் கோர்வைகள்…
நாலுப்பேருக்கு தெரிகிற மாதிரி இன்னும் எந்த பதிவையும் எழதாத போது தொடர் ஓட்டத்தில் இழுக்க ஐந்து பேரா? வலைப்பதிவில் தெர்ந்தவர்கள் ஏற்கனவே தொடர் ஓட்டத்தில் இருப்பதால். நான் தொடர் ஓட்டத்திற்கு அழைக்க தெரிந்ததும் முடிந்ததும் ஒருவர் தான்.
நான் 'தொடர் ஓட்டத்திற்கு' அழைக்க விரும்புவர்:
1. கிருத்திகா
உள்ளன்புடன்,
தினேஷ்