
சென்னை சங்கமம் மற்றும் தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி பண்பாட்டுத் துறை இணைந்து ஜனவரி 10-ம் தேதி தொடங்கி ஜனவரி 17-ம் தேதி வரை சென்னையில் கிராமிய கலை நிகழ்ச்சிகளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேரத்தில் மிகச்சிறப்பாக திருவிழவாக
நடத்தி(கொண்டடி)னார்கள். சென்னை மாநகரத்திலுள்ள பூங்காகள், வீதிகள், கோவில் முற்றங்கள் என சென்னை மாநகரத்தின் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்தன. தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் மின்விளக்குகளால் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட இரு பக்க மரங்களுக்கு இடையே சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடந்த போது நான் பார்த்ததை, புகைப்படமாக பிடித்தை, ரசித்தை மற்றும் வியந்ததை, உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பகிர்(தி)வு இது.



பறை, பரதம், பெரியமேளம், கரகம், காவடி, கும்மி, தெம்மாங்கு, ஜிக்காட்டம், ஜிம்ளா மேளம், ஒயிலாட்டம், களியல், கட்டைக்குழல், கூத்து, மான் கொம்பாட்டம், ஆழி ஆட்டம், செண்டை, சிலம்பு, கோலாட்டம், புலியாட்டம், பொம்மலாட்டம், மயிலாட்டம், மாடாட்டம், நையாண்டி, கொம்பிசை, கணியான், கூத்து, கொக்கிலியாட்டம், பொய்கால் குதிரை, மோகினியாட்டம், மோடியாட்டம், களரி, படுகாசி, சிங்காரச் செண்டை, மகுடி ஆட்டம், குறவஞ்சி, துடும்பு, கொண்டத்தாட்டம், தப்பாட்டம், தேவராட்டம், வில்லுப்பாட்டு, போன்ற 50-க்கும் மேலான பல்வேறு தமிழ் மண்ணின் மணம் மற்றும் குணம் சார்ந்த தமிழ்ர்களின் கலை வடிவங்களின் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், இலக்கிய நிகழ்வுகள் மற்றும் தமிழ் மரபிசை நிகழ்வுகள் நடந்தன. எல்லா கிராமிய கலை நிகழ்ச்சிகளையும் அந்தந்த பகுதியில் உள்ள எல்லா தரப்பு மக்களும் மிக அதிகமாக கூடி இணைந்து, மகிழ்ந்து, வியந்து, கிராமிய கலைஞர்களுடன் கலந்து, ரசித்து கொண்டாடியதது எனக்கு இது ஒரு புதிய ஆச்சிரமாகவும், அதே சமயம் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.




தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் நிகழ்ச்சி நடந்த போது ஒருபுறம் கலை திருவிழாவில் நிகழ்ச்சிகள் களைகட்டியிருந்தது, மறுபுறம் உணவு திருவிழாவில் சிறப்பு உணவு வகைகள் நாவை கட்டியிழுந்திருந்தது.



சென்னை சங்கமம் அமைப்பாளர்கள் 1500-ம் மேற்ப்பட்ட கலைஞர்களை அழைத்து வந்து தங்குவதற்கு தகுந்த இடம், நல்ல உணவு மற்றும் 8000 முதல் 9000 வரை ஊதியம் தந்து, ஒரே வாரத்தில் 4500 நிகழ்ச்சிகளை நடத்தி சென்னை மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தினார்கள். அடுத்த தலைமுறை இந்த கலைஞர்களை அடையாளம் காணவும், கிராமிய கலை நிகழ்ச்சிகளை அறிந்துக்கொள்ளவும், அதன் வழியே கிராமிய கலைகளை அழியாமல் பாதுக்காக்கவும் சென்னை சங்கமம் அமைப்பாளர்களுக்கு தோன்றிய இந்த நல்ல சிந்தனை கிராமிய கலைக்கு ஒரு புதிய நல்வழியை வகுத்துள்ளது.



கிராமிய கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் மற்றும் இசைக்கும்,, சென்னை மக்கள் மனதார அளித்ததுள்ள இந்த அங்கீகாரம் கிராமிய கலைஞர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் மட்டும் அல்லாமல் அந்த கலைக்கும் புதிய புத்துணர்வு அளித்துள்ளது.

வாழ்க கிராமிய கலைஞர்கள்! வளர்க கிராமிய கலைகள்!
உள்ளன்புடன்,
தினேஷ்
28 comments:
தினேஷ்... கலக்கியிருக்கீங்க... வாழ்த்துக்கள்.. புகைப்படங்களும், செய்திகளும் மிகவும் அருமை.. என்ன ஒரு வருத்தம் இவ்வளவு சிறப்பா இருக்குன்னு நடக்கும்போதே சொல்லியிருந்தா நானும் குடும்பத்தோடு பார்த்திருப்பேன். பரவாயில்லை அதை நேரில் பார்த்த உணர்வை தங்கள் பதிவு தருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
fotos oda serthu, oru nalla pathivu ithu.
interesting
natpodu
nivisha
//பறை, பரதம், பெரியமேளம், கரகம், காவடி, கும்மி, தெம்மாங்கு, ஜிக்காட்டம், ஜிம்ளா மேளம், ஒயிலாட்டம், களியல், கட்டைக்குழல், கூத்து, மான் கொம்பாட்டம், ஆழி ஆட்டம், செண்டை, சிலம்பு, கோலாட்டம், புலியாட்டம், பொம்மலாட்டம், மயிலாட்டம், மாடாட்டம், நையாண்டி, கொம்பிசை, கணியான், கூத்து, கொக்கிலியாட்டம், பொய்கால் குதிரை, மோகினியாட்டம், மோடியாட்டம், களரி, படுகாசி, சிங்காரச் செண்டை, மகுடி ஆட்டம், குறவஞ்சி, துடும்பு, கொண்டத்தாட்டம், தப்பாட்டம், தேவராட்டம், வில்லுப்பாட்டு, போன்ற 50-க்கும் மேலான //
ஹையோ... இத்தனையா?? இதெல்லாம் ஞபகத்துல வச்சி எழுதுயிருக்கீங்க!! great!!! படங்கள் மிக அருமையாக உள்ளன தினேஷ் :)
படங்களுடன், விரிவான தகவல்களுடன் நல்ல பதிவு தினேஷ், பாராட்டுக்கள்!
கிராமிய கலைகள் இவ்வளவு இருக்குதுன்னு , நீங்கள் எழுதியுள்ள தகவல்களில் இருந்து தான் தெரிந்துக்கொண்டேன்!!
சங்கமத்தில் சங்கமிக்க வைதது பதிவு!!
திவ்யா.
'சென்னை சங்கமம்' பற்றி படங்களுடன் கூடிய பதிவு அருமை. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்
- சகாரா.
கிருத்திகா,
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி…
தினேஷ்
நிவிஷா,
மிக்க நன்றி...
தினேஷ்
சதிஷ்,
தொடர்வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...
தினேஷ்
திவ்யா,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
தினேஷ்
சகாரா,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
தினேஷ்
பிறந்த நாள் வாழ்த்துகள்..
இத்தனை கலைகளா...படங்கள் அருமை..
பாச மலர்,
உங்கள் முதல் வருகைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி…
தினேஷ்
என் பிறந்தநாளுக்கு வாழ்த்து பதிவு எழுதி வாழ்த்திய கிருத்திகா அவர்களுக்கு மிக்க நன்றி…
தினேஷ்
அறியாமல் போனதால் தாமதித்துவிட்டேன்!! மன்னிகவும் தினேஷ்!
காலம் தாழ்த்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தினேஷ்!!
வாடாத மல்லிபோல்
இமைதிறக்கா மழலைபோல்
வற்றாத கங்கைபோல்
என்றும் இன்புற்றிருக்க வாழ்த்துக்கள் :))
பிறந்த நாள் வாழ்த்து கூறிய திவ்யா மற்றும் சதிஷ்க்கு மிக்க நன்றி நன்றி...
தினேஷ்
கருத்துகளிடையே புகைபடங்களும் அருமை! அருமையான வருணனை. வாழ்த்துக்கள்!!
இசக்கிமுத்து,
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி...
தினேஷ்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தினேஷ். தாமதத்திற்கு மன்னிக்கவும்
புகைபடங்களுடன் கூடிய சென்னை சங்கமம் அருமை தோழரே.
கதிர்.
கதிர்,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
தினேஷ்
சகாரா,
பிறந்த நாள் வாழ்த்து கூறியதற்கு மிக்க நன்றி நன்றி...
தினேஷ்
இன்று தான் இந்தப் பதிவை சகோதரி கிருத்திகாவின் பதிவின் மூலம் வந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
புகைப்படங்களும் செய்திகளும் மிகவும் அருமை.
நல்லதொரு பேட்டியாளராக, கட்டுரையாளராக மற்றும் நிருபராக அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கின்றன.
வாழ்த்துகள்.
சொல்ல மறந்துவிட்டேன்.
தாமதமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
மஞ்சூர் ராசா,
தங்களின் வாழ்த்துக்கும் ஊக்கம் தருகின்ற கருத்துக்கும் மிக்க நன்றி…
தினேஷ்
arumai arumai pukaippadagkal ungkal aakam ethil neegka yaar
தினேஷ்
anpudan
rahini
pukaipadamum aakkamum arumai
anpudan
rahini
pinthiya piranthanaal vaalthukkal
ராகினி அவர்களுக்கு,
தங்களின் ஊக்கம் தரும் கருத்துக்கும் மற்றும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...
தினேஷ்
hi dinesh
Post a Comment