இனிதே வரும் இந்த 2008-ம் ஆண்டில் ஒவ்வொரு நாழியும், நிமிஷமும், நாளும் எல்லோருக்கும் மிகிழ்ச்சியாக இனியதாக அமைய வேண்டும் என எண்ணி, என்னுடைய புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடைய சிந்தனைகள் சிலவற்றை கவிதையாக எழுத முயற்சித்திருக்கிறேன். தங்களுக்கு நேரம் இருந்தால் படியுங்கள்...
நன்றி ..................................................................................
மனிதனைத்தேடி...
மனிதனை ஜாதி வைத்து பிரித்துப்பார்க்கின்றன மிருங்கங்கல்...! ----------------------------------------------------------------------------------
காலத்தின் வேகத்தில் காணாமல் போன பறவைகளின் சிறகுகள் உதறிவிட முடியாத உறவுகள்... ----------------------------------------------------------------------------------
முகம் முடி பிறக்கிறான் முகமூடிக்கலுடன் வாழ்கிறான் முகம்க்காட்டி மறைக்கிறான் முடிகிறான் மனிதன்... ----------------------------------------------------------------------------------
சாலை ஒரத்தில் வாழ்க்கிறானா? சட்டென்று திரும்பிப்பார்த்தேன் வாழ்வது அவனில்லை வறுமை... ----------------------------------------------------------------------------------
தான் வாழ பிறர் வீழ சாலைகளில் விழ்ந்துக்கிடக்கின்றன-ஐந்தறிவு மனிதன் உடைத்த பூசணிக்காய்கள்... ----------------------------------------------------------------------------------
உன் நலனில்-நான் என் நலனில்-நீ இப்படிக்கு நம் காதல்... ----------------------------------------------------------------------------------
மதம் மூன்றிலும் மனிதநேய மனிதர்களை ஏற்க மறுப்பதில்லை - ஆனால் மறுக்கிறார்கள் மூன்று நல்ல மத கடவுள்களையே ஏற்க! மதம் பிடித்த மனிதர்கள்... ----------------------------------------------------------------------------------
உன்னை மறந்திருந்தால் இறந்திருப்பேன் என்கிறது என் இதயம்! இறந்திருந்தாலும் உன்னை பார்த்திருப்பேன் என்கிறது என் இருவிழிகள்! கண்களை தானம் செய்யச்சொல்லி... ----------------------------------------------------------------------------------
இருந்தும் இரக்கம் இல்லாதவர்களா இரக்கம் இருக்கின்ற இல்லாதவர்களா இருவரில் யார் நல்லவர்கள்? இறுக்கமாய் சிந்திக்கிறேன்... ----------------------------------------------------------------------------------
கரம், சிரம், நிறம் என உன் அழகு-அத்தனையும் புறம் இருந்தாலும் என் காதல் மட்டும் அகம்-ல் இருக்கிறது... ----------------------------------------------------------------------------------
வளர்த்த மகளை வாழ்த்தி வண்டி ஏற்றி வழி அனுப்ப-கேட்க்கிறார்கள் வரதட்ச்சனையாய் வண்டி? ----------------------------------------------------------------------------------
பார்வையற்றவர்கள் பாதைக்காட்டுக்கிறார்கள் பார்வையிருந்தும் பாதை தெரியாதவர்களுக்கு... ----------------------------------------------------------------------------------
வறுமை அதிகரிக்க ஆடை கிழிந்திருக்கிறது ஏழைகளுக்கு...
வரு’மானம்’ அதிகரிக்க ஆடை கிழிந்திருக்கிறது நடிகைகளுக்கு... ----------------------------------------------------------------------------------
இதயம் கல் அறை ஆனதால் கல்லறைகளில் கல் அறைகளில் மனிதன்... ----------------------------------------------------------------------------------
வாங்காமலே போய்விட்டது பொம்மை விலைக்கேட்ட ஏழை குழந்தை... ....................................................
உன் கைரேகையை பார்த்து எதிர்க்காலத்தை நம்பிவிடதே கை இல்லாதவனுக்கும் எதிர்க்காலம் உண்டு.... ....................................................
முதல் காதலை அடைய முயற்சிக்கும் பொது தகுதி இருப்பத்தில்லை எல்லா தகுதிக்களும் அடைந்தப் பிறகு முதல் காதல் கிடைப்பத்தில்லை... ....................................................
முதியோர் இல்லம் ........ இது ஒரு மனிதக்காட்சி சாலை இங்கு மிருங்கங்கள் வந்து போகின்றன மனிதர்களை பார்க்க! ....................................................